அநுரவை கடந்து அரசாங்கத்திற்குள் காய்நகர்த்துகிறாரா ரில்வின்? – சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

மாகாண சபை தேர்தல் நடைபெறாது என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா திட்டவட்டமாக கூறுவது ஏற்றுக்கொள்ள தக்க விடயம் அல்ல என்றும், அவர் என ஜனாதிபதியை விட மேம்பட்டவரா எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் எடுக்கப்பட்டு விட்டது என டில்வின் கூறும் நிலையில் இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மௌனம் காக்கின்ற விடயம் ஏன் என்ற கேள்விகளை உறுவாக்குவதாகவும் கூறியுள்ளார்.

தற்போது அரசாங்கம் மற்றும் கட்சி எடுக்கும் முடிவுகள் செயற்படுத்துவதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கபோவதில்லை. எனினும் இந்த விடயங்களை செயற்படுத்தபோவது ஒருபோதும் கட்சிகள் அல்ல எனவும் அரசே இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் அரசின் அங்கத்தவராக இல்லாத டில்வின் சில்வா எப்படி இந்த விடயங்களில் தலையிட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this article

More News