
இன்று அண்ணன்
RPS ஸ்டாலின அவர்களின் பத்தாமாண்டு நினைவு தினம்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ( EPRLF) முன்னோடிகளில் முக்கியமானவரும், தோழர் பத்மநாபாபாவின் இனிய தோழரும், பிரபல சட்டத்தரணியும், திராவிட இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான கும்பகோணம் RPS ஸ்டாலின் இவ்வுலகை விட்டு நீங்கிய பத்தாவது நினைவு தினமாகும்
அவரின்றி எமது இயக்கம் ஓர் பேரியக்கமாக வளர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதே வரலாற்று உண்மை. அவரது எண்ணம் முழுவதும் எமது மக்களின் விடுதலைபற்றிய உணர்வே கலந்திருந்தது. தோழர் நாபாவின் முக்கிய முடிவுகளில் எல்லாம் அவரது வழிகாட்டலும் நிச்சயம் கலந்திருந்தது.
தோழர் நாபாவின் மறைவுக்கு பின்னால் சற்று மனம் சோர்ந்து போயிருந்தாலும் எம்மைக் காணும் பொழுதெல்லாம் எமது அரசியல் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். நோயுற்றிருந்த பொழுதுகளிலும் தனது இறுதிக் காலம் வரையிலும் ஈழமக்களின் விடுதலை பற்றிய சிந்தனைகளோடேயே வாழ்ந்தவர் அண்ணா.
எங்கள் அன்பு அண்ணனின் கனவுகளும் அவரோடு வாழ்ந்த நினைவுகளும் என்றும் எம்மை வழி நடத்திச் செல்லும் என நம்புகிறோம்.
வாழ்க அண்ணன் நாமம்!
தோழர் குகன் EPRLF







