
1986 ம் ஆண்டு இதே நாள் மன்னார் அடம்பன் பகுதியில் வீர காவியமாகிய எமது தோழர்களின் நினைவு தினம். மன்னார் தள்ளாடி இராணுவ படை நகர்வும், பதுங்கியிருந்து தாக்குதலுமாகவும் அதனைத்தொடர்ந்து நடந்த நேரடியான சமரிலும் 9 ஒம்பது எமது தோழர்கள் வீர மரணமடைந்தனர்.

மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர். தோழர் விஜய், இவர் வெற்றிநாயகம் என்றும் வெற்றி மாமா என்றும் பலராலும் அறியப்பட்ட, தனது எளிமையான நடைமுறை வாழ்க்கையில் மக்களை,தோழர்களை கவர்ந்த பண்பான, ஆளுமையான மனிதநேயமுள்ள மூத்த முன்னணி தோழர் விஜய். மகளிர் அணி பொறுப்பாளர் தோழர் பானு, ஈழ போர் வரலாற்றில் இரண்டாவது களப்பலியான பெண் போராளியாக தோழர் பானுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட இராணுவ துணை தளபதி வாசன்,உட்பட தோழர்கள் ரூபிகா, ஜேந்தி, யோன், மகேஷ், சாரதி, பரதன் ஆகிய E P R L F தோழர்கள். ஈழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீர நாயகர்கள். இத் தியாகிகளுக்கு வீர வணக்கத்துடன் புரட்சிகர அஞ்சலிகளை தெரிவித்துக்கோள்கின்றோம்.

EPRLF தோழர்கள் சார்பில்
S R குமரேஸ்.







