
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ”323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டேன் பிரியசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
சர்வதேச விசாரணை
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான விவகாரத்தில் ரங்க நிஷாந்த ராஜபக்ச என்ற திறைசேரி அதிகாரி, உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.
தற்போது, முன்னாள் காவல்துறை மா அதிபர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் எதுவுமே புரியாமல் உள்ளது. இவற்றை உயிர்மாய்ப்பு சம்பவங்கள் என்று மறந்துவிட முடியாது, இவற்றில் சந்தேகம் நிலவுகின்றது.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்துக்குத் திறனோ அல்லது வலிமையோ இல்லையெனில், FBI போன்ற சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியைப் பெற்று விசாரணைகளை நடத்த வேண்டும் என தெரிவித்தார்
இறுதி யுத்தத்தில் நடைபெற்ற மனித குலத்திற்கேதிரான குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச விசாரணை குழு அமைப்பாதற்கான ஐ. நா. மனித உரிமை பேரவை தீர்மானத்தை மூக்கமாக எதிர்த்து, இலங்கையில் சிறப்பான நீதிகாட்டாமைப்பு உண்டு சர்வதேச தேவையில்லை அனுமதிக்க மாட்டோம். எமது நாட்டின் இறமைக்கு கேடு விலைவிக்க அனுமதிக்க மாட்டோம் என மூலங்கிவந்த மொட்டு கட்சியின் மூத்த தலைவர்கள் நீதித்துறையை பாத்துக்காகவும் மர்ம மரணங்களின் முடிச்சுக்களை அவிழ்க்கவும் ஐ. நா. மற்றும் அமெரிக்க உளவுபிரிவான FBI யின் தலையீட்டை நாடும் கேலிக்கூத்தான நிலைமை மொட்டு கட்சிக்கும் சிங்கள எதிர் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்மையையே இச்செய்தி சுட்டி நிற்கிறது. நல்லது சர்வதேச தலையீட்டை கோருங்கள் கையோடு மனித உரிமை பேரவையின் இறுதி யுத்தக் குற்றங்கள் விசாரணைக்கான ஐ. நா வின் தீர்மானத்தையும் ஏற்று விசாரணைக்கு ஆதரவழியுங்கள் என மக்கள் கேட்க்கின்றனர்.







