தீவகக் கடற்றொழிலாளர்கள் முன்னெடுக்கவுள்ள பாரிய போராட்டம்…!

நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் மற்றும் அதனை கட்டுப்படுத்த கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கண்ணாடி இழை படகுகளில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 09 மணிக்கு குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நயினாதீவு கடற்தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

வடக்கு கடற்றொழிலாளர்கள்
இத தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், இந்திய இழுவை மடி படகுகளில் தொடர்ச்சியாக மனிதாபிமானமற்ற முறையில் எல்லை தாண்டி கடல் வளக் கொள்ளையில் ஈடுபடுவதுடன் தீவக மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்படுகின்றன.

 

அதனால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய இழுவை படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் சாமாச பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் இணையம் வடமாகாண பிரதிநிதிகள், ஏனைய கடற்றொழிலாளர் நலன் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் கடற்றொழிலாளர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் எமது போராட்டத்துக்கு வலுசேர்க்க வியாழக்கிழமை குறிகட்டுவான் பகுதியில் ஒன்று சேர வேண்டும் என கோருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

Share this article

More News