மாகாண கல்வி அதிகாரங்களைப் பறிக்கும் மத்திய கல்வி அமைச்சின் முயற்சி நீதிமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் அவர்களால் சில வருடங்களுக்கு முன்னர் ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் மத்திய கல்வி அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டிருந்தது.

இது தொடர்பில் இன்று 3/8/2026 ஆம் திகதி யாழ் ஊடக அமையத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில்

இந்த வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்கும் திட்டத்தினை செயற்படுத்த தற்போது சட்டத்தில் இடம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டார்.

மேலும் அவ்வழக்கு தொடுக்கப்பட முன்னர் எடுக்கப்பட்ட பாடசாலைகள் தவிர ஏனையவை எடுக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பை சட்டமா அதிபர் சார்பில் மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் சட்டமா அதிபர் ஊடாக மேன் முறையிட்டு நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கின் மூலம்

1. நாடு தழுவிய ரீதியில் மாகாண அதிகாரங்களின் கீழ் இருந்த 650 பாடசாலைகளை மத்திய கல்வி அமைச்சு தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர எடுத்த முயற்சி முறியடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பாக வடமாகாணத்தில் 48 பாடசாலைகள் மாகாணசபைக்கு உரித்தான அதிகாரத்தில் இருந்து பறிக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

2. வழக்கு தொடுக்கப்பட முன்னர் தேசிய பாடசாலை என்ற பெயரால் வடமாகாணத்தின் 22 பாடசாலைகள் உட்பட கையகப்படுத்தப்பட்ட 350 பாடசாலைகளும் சட்டவிரோத மாக கையகப்படுத்தப்பட்டவையே என்பது நிறுவப்பட்டுள்ளது.

3.இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட, ஆனால் மத்திய அரசின் பல்வேறு அமைச்சுக்களால் முழுமையாகவோ பகுதியாகவோ சட்டத்தின் மூலமோ அமைச்சரவை மூலமோ சுற்றறிக்கைகள் மூலமோ அல்லது ஏனைய நிர்வாக நடைமுறைகள் மூலமோ பறிக்கப்பட்ட அதிகாரங்கள் அரசியல் யாப்பை மீறிய சட்டவிரோத நடவடிக்கைகளே என்பதையும் மத்திய அமைச்சு தொடர்தும் அவற்றை தமது அதிகாரத்தின் கீழ் செயற்படுத்துவது சட்டவிரோதம் என்பதை நிரூபிப்பதற்கான கதவுகள் இவ் வழக்கின் மூலம் திறக்கப்பட்டுள்ளது.

 

இவ்வழக்கும் அதன் வெற்றியை பற்றி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை செயலாளர் கலாநிதி க. சர்வேஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதை கீழே காண்க.

Share this article

More News