தோழர் சர்மா அக்கினியில் சங்கமமானார்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட தோழர்களில் ஒருவரான தோழர் சர்மா இயற்கை எய்தினார்.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னை பல வழிகளிலும் ஈடுபடுத்தி போராடி வந்த தோழர் சர்மாவின் வாழ்க்கை உன்னதமானது. 20 வயதுகளில் இருந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் சர்மா ஆயுதப் போராட்ட காலத்திலும் சரி ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னரான காலத்திலும் சரி தொடர்ந்து தனது பங்களிப்பை நல்கி வந்துள்ளார். இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக பணியாற்றியவர்.

குறிப்பாக கிழக்கு மாகாண மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென முன்னின்று உழைத்தவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினராக அரசியல் உயர்பீட உறுப்பினராக பணியாற்றியவர்.

அன்னாரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் 23.11. 26 இல் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் சுரேஷ் பிரேம சந்திரன் சமூக செயற்பாட்டாளர் சுகு ஸ்ரீதரன் தமிழீழ விடுதலை இயக்கத்தை (ரெலோ)சேர்ந்த கோவிந்தம் கருணாகரன் அம்பாறை மாவட்ட முன்னாள் பிரதேச சபை தவிசாளர் இராசையா ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக. தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்த தோழர் சர்மாவின் உடல் அக்கினியில் சங்கமம் ஆனது.

 

Share this article

More News