ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பும் உதவி திட்டம் வழங்கலும்…!

இன்று (21.5.2026) உரும்பிராய் மேற்கு 18ம் வட்டாரம் வைத்தீஸ்வரா கிராமத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் தோழர் கேசவனின் முயற்சியில் கிராம சமூக செயற்பாட்டாளர் கவாஸ்கர் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பும் வறியவர்களுக்கான பொருளுதவி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் தோழர் சர்வேஸ்வரன் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் பொருட்களையும் வழங்கி வைத்தார். எமக்கான தீர்வில் மாகாணசபையின் முக்கியத்துவம், அதுபற்றிய வேறுபட்ட கருத்துக்களின் ஏற்புடமை, இன்றைய ஆட்சியாளரின் நிலைப்பாடு, போலித்தனங்கள் உட்பட தமிழர் தரப்பு நிவர்த்தி செய்யவேண்டிய விடயங்கள் என விரிவான உரையாற்றினார்.

மக்கள் ஆர்வமுடன் செவிமடுத்ததுடன் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். சிலர் கட்சியில் உறுப்புரிமை பெறும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர். உரையின் பின்னர் தோழர் சர்வேஸ்வரன், கேசவன் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் உதவிபொருட்களை வழங்கி வைத்தனர்.

Share this article

More News