
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஸ்தாபகர் தோழர் பத்மநாபாவின் 36ஆவது தியாகிகள் தின நிகழ்வு 2026 ஜூன் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு திருகோணமலை உப்புவெளி பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் சிவாஸ் வரவேற்பு மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணம் தழுவிய இந்த தியாகிகள் தின நிகழ்வுக்கு முன்னாள் உதவி கல்விப் பணிப்பாளரும், மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான அகிலேஷ்பிள்ளை உதயகுமார் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான தோழர் இரட்ணம், அம்பாறை மாவட்ட மத்திய குழு உறுப்பினர் தோழர் ஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் தமிழ் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வின் போது தோழர் இரட்ணம் சிறப்புரையாற்றியதுடன், தோழர் பத்மநாபா மற்றும் இயக்கத்தின் தியாகிகளின் பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டு அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.








