ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து வவுனியாவில் பெரும் போராட்டம்….!

 

வவுனியா மாநகர சபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பதவி ஆளுநரால் பறிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வவுனியா பண்டார வன்னியன் சதுக்கத்தில் கவனீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

இப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன், சத்தியலிங்கம் மற்றும் வவுனியா மாநகர சபை உறுப்பினர்கள் பிரதேசபை உறுப்பினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this article

More News