யாழ்ப்பாணத்தில் இன்று (19.06.2026)மாலை 4 மணியளவில் தியாகிகள் தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
தோழர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களின் இல்லத்தில் யாழ் மாவட்ட தோழர்கள் ஒன்றுகூடி மலரஞ்சலி செலுத்தி தியாகிகளை நினைவுகூர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், தோழர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அஞ்சலி உரையை ஆரம்பித்து வைத்தார். பின்னர் தோழர்கள் சர்வேஸ்வரன், டாக்டர் சிவகுமார் மற்றும் நடராசா கமலாகரன் ஆகியோர் உரையாற்றி தியாகிகளின் அர்ப்பணிப்பையும் போராட்ட வரலாற்றையும் நினைவுகூர்ந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள், EPRLF அமைப்பின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்பதுடன், இம்மாத இறுதிக்குள் தோழர்களை ஒழுங்குபடுத்தி, இந்த ஆண்டு இறுதிக்குள் கிளிநொச்சி – யாழ் மாவட்ட மாநாட்டை நடத்துவதற்கான உறுதியையும் எடுத்துக்கொண்டனர்.








