வெளிநாடொன்றில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற இராணுவ விமானம் விழுந்து நொருங்கியது

வெளிநாடொன்றில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற இராணுவ விமானம் விழுந்து நொருங்கியது

கொலம்பியாவில் இராணுவத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்கு உளளானதால் அதில் பயணம் செய்தவர்கள் தொடர்பில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.

லாக்கீட் மார்டின் ஹெர்குல்ஸ் சி 130 ரக விமானம் கொலம்பியாவின் தெற்கே உள்ள அமேசான் வனப்பகுதியில் பெரு எல்லை அருகே விபத்துக்குள்ளானது. இதில் 110 இராணுவ வீரர்கள் இருந்தனர். விபத்து நடந்ததை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

அதேநேரத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இந்த விபத்துக்கு கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ கவலை தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் இருக்காது என நம்புவதாக கூறியுள்ளார்.

ஹெர்குல்ஸ் விமானம் கடந்த 1960 முதல் கொலம்பிய இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு அண்டை நாடான பொலிவியாவில் சி130 விமானம் விபத்துக்குள்ளாகி 20 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Share this article

More News