கிளிநொச்சியில் வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்களின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்கு என வலியுறுத்தி வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 

குறித்த போராட்டம், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்றது.

 

காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டத்தில் காணிகளை இழந்த முல்லைத்தீவு கேப் பாப்புலவு மக்கள் அமைப்பு, மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரவை போராட்ட குழு, யாழ் வலி வடக்கு தையிட்டி, மயிலிட்டி பலாலி ,வசாவிளான் போராட்ட அமைப்புக்கள், கிராஞ்சி மற்றும் ,பொன்னாவெளி அமைப்புக்கள் பங்குற்றி இருந்தன.

 

பல்வேறு கோரிக்கைகள்

போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் “மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு, அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அழிக்காதே, தையிட்டி என்ன தருசு நிலமா, மயிலத்தமடு மாதவனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று” என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

போராட்டத்தில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this article

More News