வவுனியாவில் சங்கீதனுக்கு ஆதரவாக கவனஈர்ப்பு போராட்டம்

அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகப் வவுனியா மாவட்ட கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது

இந் நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் வவுனியா மாவட்ட கலைஞர்கள் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் சமூக அமைப்புக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Share this article

More News