யாழில் தனியர் காணியில் இராணுவ வைத்தியசாலைக்கு எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்.

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியும் இன்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானங்களை இடைநிறுத்துமாறு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 27.03.2026 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் போது வசாவிளான் பகுதியில் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டுமானங்கள் அமைக்கப்படுவதாகவும் குறிப்பாக இராணுவத்தால் வைத்தியசாலை அமைப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் இந்தச் சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளபட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அபிவிருத்தி கூட்ட குழு தீர்மானம் செயற்படுத்தப்டுமா?

குருந்தூர்மலையில் நீதி மன்ற உத்தரைவ மதிக்காமல் விகாரை கட்டிய சிங்கள ஆட்சியும் இராணுவமும் அபிவிருததி குழு தீர்மானததை மதிக்குமா? அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு தலமை வகித்த மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக உத்தரவாதப் படுத்தவேண்டும் இல்லையேல் அபிவிருத்தி குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லையென பதவியை இராஜினாமா செய்யவாரா?

Share this article

More News