
அரசாங்கத்தின் முறையான திட்டமிடலும் மின்சார சபையின் சரியான பராமரிப்பும் முகாமைத்துவமும் இன்மையே மின் கட்டண உயர்வுக்கும் அடிக்கடி நிகழும் மின்தடைக்கும் காரணமா என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாளு:
கடந்த அரசாங்கத்தில் மின்சாரசபை மாபியாக்களிடம் சிக்கித்தவிப்பதாகவும் ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணத்தை மூன்றில் ஒருபங்காக குறைப்போம் என்றும் தடையற்ற மின்சாரத்தை வழங்குவோம் என்றும் இன்றைய என்பிபி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இன்றும் கடந்த காலத்தைப் போலவே மின்கட்டணம் அதிகரித்திருப்பதுடன் மின்தடையும் நாள்தோறும் ஏற்படுகின்றது. இந்த நிலை மாபியாக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த அரசாங்கமும் திணறுகிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் மின்சாரத்துறை சில மாபியாக்களிடம் சிக்கி இருப்பதாகவும் அவற்றிலிருந்து மின்சாரத்துறை விடுவிக்கப்பட வேண்டுமென்றும் கூறி அதற்காகவே அதனை நான்கு பிரிவாகப் பிரித்தார்கள். அப்படிப் பிரிக்கப்பட்ட பின்னர்இ மின்சார உற்பத்தியிலும் வினியோகத்திலும் எவ்வளவுதூரம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் பொதுமக்களுக்குப் தெளிவுபடுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க பாவணையாளர்கள்மீது சுமத்தப்பட்ட கட்டணங்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டது. அதற்கு இணங்க உற்பத்திஇ வினியோகம் சரியாக உள்ளதா என்ற கேள்வி இப்பொழுது எழுகின்றது. வடக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் நாளாந்தம் பல வேளைகளில்; மின்சாரம் தடைப்படுகிறது. அது சில சமயங்களில் நிமிடங்களாகவும் பலவேளைகளில் மணித்தியாலங்களாகவும் நீடிக்கின்றது.
மின்சார சபையானது அவ்வப்போது இணைப்புகளிலும் வழங்கலிலும் ஏற்பட்டுள்ள தடைகளை சீர்செய்வதற்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக சிலவேளைகளில் அறிவிப்பு வரும். பல்வேகைகளில் அறிவிப்பின்றியே மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. இப்பொழுது முழு இலங்கையிலும் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒரு பக்கத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி மிகுதியாக இருப்பதாகக் கூறி இதனால் கட்டமைப்பு பாதிப்படைந்து மின்சாரம் தடைபடுவதாகக் கூறுபவர்கள்இ பின்னர் அனல் மின்னுற்பத்தி சாதனங்கள் பழுதடைந்ததால் மின்வெட்டு தவிர்க்கமுடியாததாக உள்ளதாகவும் அறிவிக்கின்றனர். இந்த இரண்டு விடயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கின்றது.
சோளார் மின்னுற்பத்தியை தேசிய மின்னுற்பத்தியுடன் சரியான முறையில் இணைப்பதற்கு ஏற்ற தொழில்நுட்பமோஇ அல்லது சாதன பற்றாக்குறையோ இவர்களுக்கு இருக்கின்றதா? மழைக்காலத்தில் நீர்மின் உற்பத்தி பெரிய அளவில் கிடைக்கக்கூடிய சூழ்நிலையில் மின் வெட்டு ஏற்படுவதற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளும் எழுகின்றது. உலக நாடுகளில் இரண்டு நிமிடம் மின்சாரம் தடைப்பட்டாலே அது பெரிய பேசுபொருளாக மாறிவிடுகின்றது. ஆனால் இலங்கையில் பல தடவை மின்சாரம் தடைபடுவதானது ஒரு அன்றாட செயற்பாடாக மாறிவிட்டது. இந்த நிலையில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் மின்சார உற்பத்தி தடைபடுவதானது ஒட்டுமொத்த பொருளாதாரம்இ வாழ்வாதாரம் என அனைத்து நடவடிக்கைகளையுமே பலமணி நேரம் பின்னோக்கி நகர்த்துகிறது. ஆகவே அரசாங்கம் இந்த விடயங்களைக் கவனத்தில் எடுத்து மின்கட்டணத்தைச் சீரமைத்து தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுரேஷ் க. பிரேமச்சந்திரன்
உத்தியோகபூர்வ பேச்சாளர்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
21.10.2026







